• So.. März 8th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையை சேர்ந்த தாயும் மகளும் சென்னை விமான நிலையத்தில் கைது

Juni 18, 2025

போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இந்தியாவிற்கு சென்ற இலங்கையர்கள் இருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து திங்கட்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரான் ஒருபோதும் சரணடையாது…கமேனியின் அறிவிப்பால் பதறும் உலகம்

இலங்கையைச் சேர்ந்த 48 வயதுடைய தாயும் 21 வயதுடைய மகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட தாயும் மகளும் கடந்த திங்கட்கிழமை இந்தியாவின் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.

இதன்போது இந்திய குடிவரவு அதிகாரிகள், சந்தேக நபர்களான தாயையும் மகளையும் விசாரித்து அவர்களின் கடவுச்சீட்டுகளை சோதனை செய்துள்ளனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடம் உள்ள கடவுச்சீட்டுகள் போலியானது எனவும் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.