• So.. Juli 12th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தியாவில் இரு தமிழர்கள் கைது !

Juli 27, 2025

இந்தியா – புதுச்சேரியில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  புதுச்சேரியின் காரைக்காலில் இரண்டு இலங்கையர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் ஐந்து இந்தியர்களும் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இலங்கையர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றுமொருவர் திருகோணமலையை சேர்ந்தவர் என்று இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.