வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் ஒன்பதாம் நாள் இன்றாகும்.
ஒன்பதாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள் இன்று (06) காலை 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளன.
இதன்போது விசேட ஆராதனைகள் இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் உள்வீதியுலா வருவார்.
ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 7ஆம் திகதி மஞ்ச திருவிழாவும், 20 ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், 21ஆம் திகதி தேர் திருவிழாவும், 22ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
- இலங்கையில் வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு
- கஞ்சாவுடன் 16 வயது பாடசாலை மாணவன் கைது
- வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியான் கொடியேற்றம்
- வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்
- கிளிநொச்சி ஏ9 வீதியில் இரு லொறிகள் மோதி விபத்து!! 21 வயது இளைஞன் பலி
