• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இங்கிலாந்தில் இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த கதி

Sep. 20, 2025

இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைந்ததற்காகவும், அநாகரீகமாக நடந்து கொண்டதற்காகவும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகவுள்ளார்.

Fratton, நியூ வீதியை சேர்ந்த 37 வயதுடைய இலங்கை  தமிழர் மீதே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி சவுத்தாம்ப்டனில் உள்ள ஹைஃபீல்ட் வீதியில் 25 வயது நபர் ஒருவரை குறித்த இலங்கையர் தாக்கியுள்ளார்.

பின்னர் அதே பகுதியில் அவர் அநாகரிகமாக நடந்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சம்பவத்திற்காக இலங்கை தமிழர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.