• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விஜயின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 க்கும் மேற்பட்டோர் பலி

Sep. 28, 2025

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் கரூரில் மக்களை சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாக, முதற்கட்ட தகவல் வெளியானது. பின்னர், பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 3 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

பின்னர் உயிர்ப்பலி 31 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை. மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே பின்னர் அவர்களின் உயிர் பிரிந்தது. சடலமாக கொண்டு வரப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களில் 16 பெண்கள், 6 குழந்தைகள் எனத் தெரியவந்துள்ளது. இதற்கிடையே உயிரிழப்பு 40-ஐ தாண்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.