• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புலம்பெயர்ந்தவர்களுக்கு பிருத்தானியா பிரதமர் விடுத்த முக்கிய அறிவிப்பு

Sep. 29, 2025

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக, 2029 முதல் ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட டிஜிட்டல் ஐடியை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்திய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இது சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்து வேலை செய்வதை கடினமாக்கும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த திட்டம் மக்களுக்கு பல சிறப்பு சலுகைகளை வழங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், டிஜிட்டல் அடையாள அட்டைகளால் சட்டவிரோத குடியேறிகளின் வருகையைத் தடுக்க முடியாது என்று எதிர்க்கட்சி கூறியுள்ளது.இந்த நிலையில், பிரதமரின் டிஜிட்டல் அடையாள அட்டை முறை அறிவிப்புக்கு எதிராக 1.6 மில்லியனுக்கும் அதிகமான கையெழுத்துகளுடன் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டைக்கு பதிவு செய்ய யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.அந்நாட்டின் பாரம்பரியத்தின்படி, ஒரு மனுவில் 100,000 க்கும் மேற்பட்ட கையொப்பங்கள் பெறப்பட்டால், அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.