• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – 26 பேர் உயிரிழப்பு!

Okt. 1, 2025

மத்திய பிலிப்பைன்ஸில் நேற்று (30) 6.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 

செபு நபர கடற்கரைக்கு அருகில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலநடுக்கத்தில் மேலும் 147 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. 

இந் நிலநடுக்கத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகிறது.

இதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.