இன்று விஜயதசமி. அதிலும் வியாழக்கிழமையான குரு நாளில் இந்த விஜயதசமி வந்திருப்பது அதி சிறப்பு. இன்று மாலை 3:45 மணி வரை தான் இந்த தசமி திதி இருக்கிறது. கூடுமானவரை இன்று மாலை 3:45 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். அப்படி தவறவிட்டவர்கள் மாலை நேரத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தவறு கிடையாது.
சூரிய உதயத்தின் போது என்ன திதி இருக்கிறதோ, அந்த திதியின் சக்தி அந்த நாள் முழுவதும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயதசமி நாளில் நாம் துவங்கக்கூடிய நல்ல காரியங்கள் அனைத்தும் எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்தையும் வெற்றியையும் அடையும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் படிக்கக்கூடிய பிள்ளைகள் எதிர்காலத்தில் வாழ்க்கையில் அதி விரைவாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், இன்றைய நாளில் என்ன பரிகாரம் செய்யலாம்.
உங்களுடைய பிள்ளைகள் கல்வியில் கொஞ்சம் பின் தங்கிய நிலையில் இருந்தாலோ, படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலோ, இந்த பரிகாரத்தை இன்றைய நாளில் செய்து பாருங்கள். அவர்களுடைய மந்தத்தன்மை நீங்கும். கல்வியில் அவர்கள் சிறந்து விளங்குவதற்கு உண்டான அத்தனை ஆசிர்வாதத்தையும் அந்த சரஸ்வதி தேவி தடையில்லாமல் வழங்குவாள். அதற்கான ஆன்மீகம் பரிகாரத்தை இப்போது பார்த்து விடுவோமா.
விஜயதசமி பரிகாரம் இன்றைய நாளில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். நேற்று தான் வீட்டில் ஆயுத பூஜை பண்டிகை சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள். ஆகவே பெருசாக எந்த வேலையும் இருக்காது. விளக்கு மட்டும் ஏற்றி வைத்துவிட்டு, லக்ஷ்மி சரஸ்வதி விநாயகரின் திரு உருவப்படம் கட்டாயம் பூஜை அறையில் இருக்கும். அதில் இருக்கும் சரஸ்வதி தேவியை மனமாற பிள்ளைகளை வணங்க சொல்லுங்கள்
ஒரு தாம்புல தட்டில் பச்சரிசி நெல் கிடைத்தால் அதைக் கொட்டி பரப்பிக் கொள்ளுங்கள். இல்லை என்றால் வெறும் பச்சரிசியை அந்த தாம்பூல தட்டில் பரப்பி உங்களுடைய பிள்ளைகளை வலது கையால் ஆல்காட்டி விரலால், அந்த பச்சரிசியில் பிள்ளையார் சுழி போட சொல்லுங்கள்.
இவ்வளவு தான் பரிகாரம். இன்று சரஸ்வதியின் முன்பு பிள்ளையார் சுழி போட்டால் உங்கள் பிள்ளைகளுடைய கல்வியில் இருக்கும் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. இன்று குருநாளாக வேற இருக்கிறது.
குருவை வழிபாடு செய்ய கல்வியில் இருக்கும் தடை அகலும். விஜயதசமி அன்று என்ன வேலையை செய்தாலும் அது உங்களுக்கு வெற்றிதான். இன்று நீங்கள் உங்கள் கல்வியில் இருக்கும் தடைகள் அகல வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு இந்த வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் வழிபாடு, உங்கள் பிரார்த்தனை எந்த வகையிலும் தடைபட்டு நிற்காது.
உங்களுடைய பிள்ளைகள் ரொம்பவும் சிறு குழந்தைகளாக இருந்தால், அவர்களுடைய கையை பிடித்து அந்த பச்சரிசியில் பிள்ளையார் சுழி போட வையுங்கள். பெற்றவர்களுடைய உதவியோடு பிள்ளைகள் இந்த பிள்ளையார் சுழியை அந்த பச்சரிசியில் போடலாம். பிறகு சரஸ்வதி தேவியை மனதார வணங்கி விட்டு உங்களுடைய பிள்ளைகளை இன்றைய தினம் ஏதாவது ஒரு விஷயத்தை படிக்கச் சொல்லுங்கள்.
இதையும் படிக்கலாமே: விஜயதசமி நாளன்று கூற வேண்டிய மந்திரம் 5 லிருந்து 10 நிமிடம் படித்தால் கூட போதுமானது. அதன் பிறகு இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். இன்று மட்டும் அந்த பச்சரிசி தட்டு பூஜை அறையில் இருக்கட்டும். நாளை அந்த பச்சரிசியை எடுத்து ஏதாவது பிரசாதம் செய்து இரண்டு ஏழைகளுக்கு தானமாக கொடுக்கவும். இவ்வளவுதான் வழிபாடு. நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பாருங்கள். உங்கள் பிள்ளைகளுடைய வாழ்க்கை எதிர்காலத்தில் பிரம்மாண்ட வெற்றியை அடையும்.
- தங்க விலையில் அதிரடி மாற்றம் : வெளியான தகவல்
- கட்டுநாயக்கவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்
- யாழில் பிரான்சில் இருந்து வந்த இளம் குடும்பஸ்தர் கொலை!!
- இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 18 பேர் பலி; 34 பேர் மாயம்
- டென்மார்க்கில் உயிரிழந்து யாழ் இளைஞன்
