• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை வழிபாடு

Okt. 3, 2025

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு வாய்ந்த சனிக்கிழமையாக திகழ்கிறது. இந்த சனிக்கிழமையில் பெருமாள் வழிபாட்டை நாம் செய்வதன் மூலம் பெருமாளின் பரிபூரணமான அருளை பெற முடியும் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

பலரும் பல விதங்களில் புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபாடு செய்வார்கள். குறிப்பிட்ட ஒரு வாரத்தில் பெருமாளுக்கு தளிகை இட்டு வழிபாடு செய்யும் வழக்கத்தையும் வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ தளிகை போடாமல் வழிபாட்டை மட்டும் மேற்கொள்வார்கள்.

இன்னும் சிலரோ தளிகை போடுவதற்காக தயார் செய்யக்கூடிய பிரசாதத்தை பிறரிடமிருந்து யாசகமாக வாங்கி வந்து செய்வார்கள்.

இப்படி பலவிதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அந்த வகையில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமைபுரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை தளிகை இட்டு வழிபாடு செய்ய விரும்புபவர்கள் காலை 7:45 மணியிலிருந்து 8:45 மணிக்குள்ளும் 10:45 மணியிலிருந்து 11:45 மணிக்குள்ளும் தளிகை போட்டு வழிபாட்டை மேற்கொள்ளலாம். சலுகை போடும் வழக்கம் இல்லை என்பவர்கள் வழிபாட்டை மட்டும் செய்ய வேண்டும் என்ற ஆசைப்பட்டால் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது காலை 7:45 மணியிலிருந்து 8: 45 மணிக்குள்ளோ அல்லது 10 50 மணியிலிருந்து 11: 50 மணிக்குள்ளோ அல்லது மாலை 5:30 மணியிலிருந்து 9:30 மணிக்குள்ளோ வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

வழிபாட்டை மட்டும் செய்ய விரும்புபவர்கள் பெருமாளுக்காக புளி சாதம், ஏதாவது ஒரு இனிப்பு, சுண்டல் வகை என்று செய்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும். தளிகை இட்டு வழிபாடு செய்பவர்கள் பிரசாதத்திற்கு அருகில் இருக்கக்கூடிய வீடுகளில் குறைந்தபட்சம் மூன்று வீட்டிலாவது அரிசியை தானமாக வாங்கி வந்து செய்வதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது.

இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது பெருமாளுக்குரிய மந்திரமான “ஓம் பாண்டுரங்கா போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 144 முறை கூறி பெருமாளுக்கு துளசி இலைகளாலோ அல்லது வாசனை மிகுந்த மலர்களாலோ அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த வழிபாட்டை செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் பெருமாளுக்கு துளசி தீர்த்தத்தையும் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை பெருமாளை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீருவதோடு செல்வ செழிப்புடன் வாழ முடியும்.

அதிர்ஷ்டம் தரும் ஸ்படிக தாமரை பெருமாளை முழு மனதோடு நினைத்து திருமாலுக்குரிய புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுடைய வீட்டிற்கு பெருமாளும் தாயாரும் தேடி வருவார்கள்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.