• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜப்பானை உலுக்கிய 6 ரிச்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Okt. 5, 2025

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கமானது நேற்றிரவு (04.10.2025) ஜப்பானின் ஹோன்சு நகரின் கிழக்கு கடற்கரையோரம் அருகே ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.

இந் நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜப்பான் பசிபிக் நெருப்பு வளையத்தில் எரிமலை மண்டலத்தில் அமைந்துள்ளது. இதனால், அடிக்கடி லேசான நிலஅதிர்வுகள் ஏற்படும் நாடாக அறியப்படுகிறது.

நூற்றாண்டில் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள், சுனாமிகள் போன்றவை பலமுறை ஏற்பட்டு இருக்கின்றன

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.