யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டு , பெற்றோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்றுள்ளது. பத்தைமேனி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் கதவுகளை உடைத்து திறக்க முயற்சித்துள்ளனர்.
வீட்டில் இருந்தோர் உட்பக்கமாக கதவுகளை மூடி விட்டு கூக்குரல் எழுப்ப தாக்குதலாளிகள் வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
- நேபாளத்தில் நள்ளிரவில் நிலநடுக்கம்; பீதியில் மக்கள்
- சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
- தேர் ஏறிஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி தந்த நல்லூர் கந்தன் .
- திருமணநாள் வாழ்த்து. திரு திருமதி திருக்கயிலாயநாதன் சிவகுசா. (09.09.2026, பிரான்ஸ்)
- பிறந்த நாள் வாழ்த்து. அ.ராஜேஸ்வரன் (09.09.2026, சுவிஸ் )
