• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் ஏழாலையில் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் கொலை

Okt. 5, 2025

யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலையத்திற்கு சென்ற இருவருக்கும், அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது. 

இதனையடுத்து ஆயுதம் ஒன்றினால் வர்த்தக நிலைய உரிமையாளர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் கடை ஒன்றினை நடாத்தி வருகின்றார். அந்த கடைக்கு மதுபோதையில் சென்ற சந்தேகநபர் மிக்சர் பக்கட்டுகளை தருமாறு கேட்டுள்ளார்.

ஏற்கனவே கடனுள்ள காரணத்தால் அவர் மிக்சர் பைக்கட்டுகளை கொடுக்க மறுத்ததன் காரணமாக இருவருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

முரண்பாடு கைகலப்பாக மாறிய நிலையில் கத்தியால் குத்தி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலையை மேற்கொண்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.