• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறப்பாக இடம்பெற்ற யாழ் வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழா;

Okt. 6, 2025

யாழ்ப்பாணம், வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழா நேற்று (05) சிறப்பாக இடம்பெற்றது.

கணபதீஸ்வரக் குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு காலை 7:30 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றதனை தொடர்ந்து சரியாக 9:30 மணியளவில் வல்லிபுர ஆழ்வார் தேர் ஏறி வீதி உலா வந்தார்.

முன்னே ஆஞ்சநேயப்பெருமான் செல்ல பின்னே விநாயகப்பெருமானும், இலக்குமி தேவியை தொடர்ந்து ஶ்ரீ வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் வலம்வந்தார்.

நேற்று தேர்த்திருவிழாவில் அடியவர்கள் அங்கப்பிரதட்சணம், பால் காவடி, செடில்காவடி, தீச்சட்டி உட்பட்ட பல்வேறு நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றினர். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

யாழ் வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழா; பக்தர்கள் பரவசம் | Jaffna Vallipuram Azhwar Temple Chariot Festival

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.