• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சத்தான உணவுகளும் குறைபாடுகளின் எச்சரிக்கை அறிகுறிகளும்

Okt. 12, 2025

ஆரோக்கியமான வாழ்வுக்கு பழங்கள், காய்கறிகள், விதைகள், முழு தானியங்கள் போன்ற பல்வேறு சத்தான உணவுகள் அவசியம். உதாரணமாக, வாழைப்பழம் பொட்டாசியம் நிறைந்தது; ஆரஞ்சு வைட்டமின் ‚சி‘-க்கும், பாதாம் வைட்டமின் ‚ஈ‘-க்கும் புகழ் பெற்றவை. முட்டை அதிக புரத சத்தை கொண்டுள்ளது.

குறைபாடுகளின் அறிகுறிகள் என்னென்ன:

உடலில் சத்து குறைபாடுகள் ஏற்படும்போது சில அறிகுறிகள் தோன்றலாம்:

காலில் தசைப்பிடிப்பு ஏற்படுவது மக்னீசியம் குறைபாடாக இருக்கலாம்.

அதிக மூச்சு வாங்குதல், கைகள் சில்லென இருத்தல் இரும்புச் சத்துக் குறைபாடு காரணமாக இருக்கலாம்.

ஈறுகளில் இரத்தக்கசிவு பெரும்பாலும் வைட்டமின் ‚டி‘ குறைபாட்டை குறிக்கும்.

பாதங்கள் மரத்துப்போவது வைட்டமின் ‚பி‘ குறைபாட்டால் ஏற்படலாம்.

புரதம், தசை வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகவும் இன்றியமையாதது. புரத சத்து குறைந்தால், உடல் வீக்கம், கொழுப்பு கல்லீரல், தசை வலுவின்மை, முடி உதிர்தல் மற்றும் சர்க்கரை உணவுகள் மீது அதிக ஆர்வம் போன்றவை ஏற்படலாம்.

சத்துள்ள வாழ்வுக்கு, முட்டை, பருப்பு வகைகள், பால் மற்றும் கொட்டை வகைகள் போன்ற புரத உணவுகளை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.