• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்காவில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந்த விமானம்..

Okt. 13, 2025

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹிக்ஸ் விமான நிலையத்திற்கு அருகே, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

நேற்று பிற்பகலில்  சிறிய விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 18 சக்கர டிரக் மற்றும் பிற வாகனங்கள் மீது மோதியது. மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இந்த விபத்தின் காரணமாக, டிரக் மற்றும் அருகிலிருந்த கார்கள் உட்பட பல வாகனங்கள் முழுவதுமாக சேதமடைந்தன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர்.

தீயணைப்பு படையினர் நடத்திய மீட்பு பணியில், தீயில் எரிந்த நிலையில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்தத் துயர விபத்து குறித்து அமெரிக்க விமான போக்குவரத்துத் துறை விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.