ஒரு சிலர் எல்லாம் அதிர்ஷ்டம் அடித்தது போல திடீரென பணக்காரனாகி விடுவார்கள். ஒரு சிலரோ எவ்வளவு உழைத்தாலும் கடைசி வரை அவரால் செல்வந்தராக வாழ முடியாமல் ஏழையாகவே இருந்துவிட்டு சாவார்கள்.
இந்த முரண்பாடு வருவதற்கு காரணங்கள் தெரியுமா? ஒரு மனிதரிடம் செல்வம் பெருகாமல் இருப்பதற்கு அவன் செய்யக்கூடிய 5 முக்கியமான தவறுகள் என்னென்ன?
1. தானம் செய்யாமல் இருப்பது ஒரு மனிதனுக்கு எவ்வளவு பணம் காசு வந்தாலும், ஒரு சிறு பகுதியை மற்றவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யும் மனப்பான்மை இல்லாமல் இருந்தால், அவர்களிடம் செல்வம் பெருகாது குறையும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும், அவர்கள் தானம் செய்யும் பழக்கம் உடையவர்களாக இருந்தால், கண்டிப்பாக அவர்களிடம் செல்வம் சேரதான் செய்யும்.
2. கர்ம கடன் ஒரு மனிதன் முன்வினை பாவங்கள் மூலம் கர்ம கடன்கள் வைத்திருந்தால், கண்டிப்பாக அவர்களிடம் செல்வம் பெருகாது என்று சொல்லப்படுகிறது.
மற்றவர்களுக்கு முற்பிறவியில் செய்த தீங்குகளும், இப்பிறவியில் செய்த பாவங்களும் கர்ம கடனாக நம்மீது சித்ரகுப்தரால் வரவு வைக்கப்படுகிறது.
பணத்தை மதிப்பில்லாமல் நடத்துவது, பணத்தின் அருமை தெரியாமல் செலவு செய்வது, மற்றவர்களை பணத்திற்காக ஏளனமாக மரியாதை இல்லாமல் நடத்துவது, முறையற்ற வழிகளில் செலவு செய்வது, ஏமாற்றி சுரண்டுவது போன்ற விஷயங்களை செய்திருந்தால், கண்டிப்பாக அவர்களிடம் செல்வம் பெருக்காது.
3. பணத்தின் மீது எதிர்மறை எண்ணங்கள் பணத்தின் மீதான நமக்கு இருக்கும் எதிர்மறை எண்ணங்களும், செல்வந்தராக மாறுவதை தடுத்து நிறுத்துகிறது. பணம் தீமையானது,” “பணக்காரர்கள் கெட்டவர்கள்,” அல்லது “பணம் கஷ்டப்பட்டுத் தான் சம்பாதிக்க முடியும்” போன்ற ஆழ்மனதில் பதியப்பட்ட எதிர்மறை நம்பிக்கைகள், செல்வத்தை உங்களை அணுக விடாமல் தடுக்கலாம். செல்வத்தை வெறுப்பது அல்லது குறை கூறுவது, அது வருவதற்கான ஆன்மீக ஆற்றல் ஓட்டத்தைத் தடுக்கிறது.
4. நன்றி உணர்வு உணவு, குடிநீர், பணம், வீடு ஆகியவற்றின் மீது பற்று இல்லாமல் உதாசீனப்படுத்துவது. அழுக்கு, குப்பை, வீண் செலவு போன்றவை மகாலட்சுமிக்கு பிடிக்காத விஷயங்கள், இதனாலும் செல்வம் வருவதற்கான தடைகள் ஒரு மனிதனுக்கு ஏற்படுமாம். உங்களிடம் இருப்பவற்றுக்கு நன்றி சொல்லாமல், நன்றி உணர்வு இல்லாமல் இருத்தலும் செல்வம் பெருகாமல் இருப்பதற்கு காரணங்களாக இருக்கிறது.
5. மூத்தவர்களை அவமதிப்பது ஆசிரியர்கள், குருமார்கள், வயதில் பெரியவர்கள், முன்னோர்கள் ஆகியோரின் ஆசீர்வாதங்கள் இல்லாமல் இருந்தாலும், செல்வத்தின் மீதான தடையை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். முற்பிறவியும், இப்பிறவியிலும் இவர்களை எப்பொழுதும் மரியாதையுடன் நடத்தி இருக்க வேண்டும்.
அப்படி அல்லாமல் அவமதித்து இருந்தால், அவர்களுடைய சாபத்தாலும், நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் அதனால் முன்னேற முடியாமல் போகலாம். ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி மற்றும் வியாழன் பகவான் ஆகியோரின் ஆசிர்வாதங்கள் கண்டிப்பாக தேவை. இவர்களை அவதூறாக பேசினாலும், அவர்களின் சாபத்திற்கு ஆளாவது போல உங்களுடைய செயல்கள் இருந்தாலும் வாழ்க்கையில் உங்களுக்கு செல்வம் பெருகாமல் போகும்.
வியாழன் கிழமையிலும், சனிக்கிழமையிலும் குரு மற்றும் சனி வழிபாடு தொடர்ந்து செய்து வாருங்கள். இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து செல்வம் பெருகும். வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சிறு சிறு தானங்களும், தர்மங்களும் செய்து வாருங்கள், நிச்சயம் நல்லது நடக்கும்.
