அமரர் சங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் (ஓய்வுபெற்ற மின்சாரசபை ஊழியர், சுன்னாகம்)
தோற்றம் 18.07.1949 — மறைவு 15.10.2025
ஈவினை மத்தி புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் அவர்கள் கடந்த 15.10.2025 அன்று இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலம்சென்ற சங்கரப்பிள்ளை இராசம்மாவின் அன்பு மகனும் குணேஸ்வரியின் அன்புக்கணவரும் காலம்சென்ற ஐயாத்துரை சவுந்திரம் தம்பதியரின் பாசமிகு மருமகனும் காலம்சென்ற இராசலிங்கம் மற்றும் மகாலிங்கம் ஆகியோரின் சகோதரனும், காலம்சென்ற இராசமணி மற்றும் குணமணியின் பாசமிகு மைத்துனரும் நகுலா (கனடா) சசீலன்(ஆசிரியர், யா/சென்.ஜோன்ஸ் கல்லூரி) வித்தகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சூரியகுமார் (கனடா) காந்தரூபி(SDO, Kopay) ஶ்ரீவைஸ்ணவி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், கனிஸ்ரன்(கனடா) யதுஸ்ரன்(கனடா) அபினாஸ் மற்றும் சஷ்மிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனாரும், நேமிநாதன்(சுவிஸ்) தணிகைநாதன்(லண்டன்) மதிவண்ணன்(முகாமைத்துவ உதவியாளர், மாவட்ட பிரதம செயலாளர் அலுவலகம்) அந்திவண்ணன்(Srikumaran Tex) சக்திவண்ணன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 19/10/2025 அன்று காலை 9 மணியளவில் ஈவினையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக ஈவினை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
தகவல்
குடும்பத்தினர்
தொலைபேசி 0771876571
ஈவினை மத்தி புன்னாலைகட்டுவன்

