• Do.. März 12th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் அறிமுகமாகியுள்ள புதிய சட்டம்!  

Okt. 16, 2025

பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், ஆங்கிலப்புலமை இல்லாவிட்டால் வேலை செய்யமுடியாதவகையில் சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

துயர் பகிர்தல். சங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் (15.10.2025,ஈவினை)

ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி,குறித்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா தொடர்ந்து சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த விரும்புவதாக தெரிவித்து வருகின்றது.

எனினும், பிரித்தானியா சட்டப்படி வருபவர்கள் மீதும் கடினமான கட்டுப்பாடுகளை விதித்தவண்ணம் உள்ளது.

இந்தவகையில் பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், Secure English Language Test (SELT) என்னும் தேர்வை எழுதி வெற்றி பெறவேண்டும்.

சில குறிப்பிட்ட சட்டப்படியான வழிமுறைகள் மூலம் விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்தோர், பேசுதல், கவனித்தல், வாசித்தல் மற்றும் எழுதுதலில், A மட்டத்தில் ஆங்கிலப்புலமை கொண்டவர்களாக இருக்கவேண்டும்.

இந்த புதிய விதி, 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 8ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.