விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, டெல்லி விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது;
விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் மென்பொருளில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் பிற பகுதிகளில் இருந்து வந்து சேரும் 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் இந்த அசௌகரியத்திற்கு மன்னித்து விடுங்கள். விரைவில் கோளாறு சரி செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட விமான பயண நேர அட்டவணைகள் வெளியிடப்படும்.
எனவே, பயணிகள் அனைவரும் தங்களின் விமானப்பயணம் குறித்த விபரங்களை அறிய தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தெரிவித்தார்.
இதனிடையே, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்;
டெல்லியில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அனைத்து விமானங்களின் புறப்பாடுகள், வருகைகள் தாமதமாகியுள்ளன.
பயணிகள், spicejet.com/#status மூலம் தங்கள் விமானப் பயணம் குறித்த தகவல்களை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் நீரில் மூழ்கி மரணம்!
- இந்திய விமானங்கள் வான் வெளியை பயன்படுத்த தடை நீடிப்பு!
- பிறந்தநாள் வாழ்த்து.செல்வி அபிஷா முரளிதரன் (21.04.2026, சுவிஸ்)
- அல்லிக்குட்டி சின்னத்துரை மறைந்தாலும் எம்மனங்களில் வாழ்பவர்”(21.04.2026)
- போரில் ரஷ்யாவின் இராணுவ உதவி! ஈரான் தரப்பு வெளியிட்ட அறிவிப்பு
