• So.. März 8th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்னலுடன் கூடிய மழை!

Nov. 11, 2025

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுடன், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடியதுடன் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளதாக திணைக்களம் எச்சரித்து, இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.