டித்வா புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் முல்லைத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் நீரில் மூழ்கியுள்ளது.
அத்துடன் ஆலயத்தை சூழ நின்ற மரங்களும் பாறி விழுந்துள்ளன.
மூழ்கும் இலங்கை – நாட்டு மக்களுக்கு அவசர வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்
இதேவேளை முல்லைத்தீவில் சில பகுதிகளுக்கு கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் முல்லைத்தீவில் 1550 குடும்பங்களை சேர்ந்த 4594 பேர் 42 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலமைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஊடகங்களுக்கு இன்று (30) கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகப்பெருமளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 1550 குடும்பங்களை சேர்ந்த 4594 பேர் பாதிக்கப்பட்டு 42 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
2000 த்திற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 5400 பேர் வரை உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் இருக்கின்றார்கள். இந்த கணக்கெடுப்பு முழுமையாக எடுக்கவில்லை காரணம் முல்லைத்தீவு மாவட்டம் முற்றாக தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கடந்த 28ம் ,29 ஆம் திகதிகளில் மின்னசாரம் தொலைத்தொடர்பு இல்லை (இன்றுதான் (30) மின்சாரம் தொலைத்தொடர்புகள் சற்று சீர்செய்யப்பட்டு வருகின்றன) தற்போது தொலைத் தொடர்பு வசதிகள் சீர்செய்யப்பட்டாலும் முழுமையாக தொலைத் தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 30ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 90ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இயல்புநிலை மிகமோசமாக பதிக்கப்பட்ட நிலையில் அவர்களின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
45ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றாக வெள்ள்தில் மூழ்கியுள்ளதால் அவை முற்றாக அழிவதற்கான வாய்ப்புக்கள் உள்ளாகியுள்ளது” என கூறியுள்ளார்.
- சனி-புதன் உருவாக்கிய லாப திருஷ்டி யோகம் ; இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம்
- யாழில் 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கடற்படையால் கைது
- பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக பாவனை தொடர்பில் பரிசீலனை!
- அரச பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்
- 10 ஆம் ஆண்டு நினைவு. தம்பு இராமநாதன் (சைவப்பா) சிறுப்பிட்டி 21.01.2026
