• Mi.. Jan. 21st, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்று உருவாகும் நவபஞ்ச யோகம் ; இனி இந்த இராசியினர்களுக்கு இராஜயோகம் தான்

Dez. 5, 2025

ஜோதிடத்தில் குரு பகவான் ஒரு மனிதனுக்கு ஞானத்தை வழங்கக் கூடியவராகவும் நன்மையை செய்யக்கூடியவராகவும் இருக்கிறார்.

அந்த வகையில் 2025 டிசம்பர் 5 குரு பகவான் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். டிசம்பர் 6 அன்று காலை 6. 32 மணி அளவில் குரு புதன் பகவானுடன் இணைகிறார்.

பொற்காலத்தை பெறும் ராசியினர்

இந்த குரு புதன் இணைவு ஜோதிடத்தில் சிறந்த பலனை உண்டாக்கக் கூடியது. குரு புதன் இணைவு நவபஞ்ச யோகத்தை உருவாக்கி குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை வழங்கி பொற்காலத்தை கொடுக்க இருக்கிறார்கள்.

மிதுனம்: மிதுன ராசியினருக்கு குரு புதன் இணைவானது அவர்களுக்கு ஒரு வகையான தெளிவை கொடுத்து சரியான முடிவை எடுக்கக்கூடிய ஒரு தன்மையை கொடுக்கப் போகிறார்கள்.  பொருளாதார நிலை மேம்படும். ஒரு சிலருக்கு வேலை வாய்ப்புகளில் பாராட்டுக்கள் கிடைக்கக்கூடும். குழந்தைகளுடைய கல்வி சம்பந்தமான விஷயங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய காலமாக அமையப் போகிறது.

துலாம்: துலாம் ராசியினருக்கு குரு புதன் இணைவானது இவர்களுக்கு வாழ்க்கையை பற்றிய புரிதல் கொடுக்கப்போகிறது. நீண்ட நாட்களாக ஒரு விஷயத்திற்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்றால் அவை அனைத்தும் உங்களுக்கு கைகூடிவரும். இந்த காலகட்டங்களில் உங்களுக்கு வேலையில் அங்கீகாரம் கிடைக்கக்கூடிய ஒரு பொன்னானமான காலம் ஆகும். குடும்ப உறவுகள் இடையே ஒரு நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

மகரம்: மகர ராசியினருக்கு குரு புதன் இணைவானது இவர்களுக்கு இவர்களைப் பற்றிய ஒரு புரிதலை கொடுக்கப் போகிறது.  தொழில் ரீதியாக ஒரு சரியான முடிவை எடுக்க வைக்க கூடிய ஒரு அற்புதமான காலகட்டமாகும். திருமண வாழ்க்கையில் சந்தித்த சங்கடங்கள் விலகும்.  நல்ல வரன் அமையும். குநீண்ட நாள் உடல் உபாதைகளுக்கான நல தீர்வு உண்டாகும். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.