• Mi.. Feb. 11th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இங்கிலாந்தைத் தாக்கிய பனிப்புயல்: மின்சாரம் துண்டிக்கப்பட்ட பல வீடுகள் !

Jan. 9, 2026

இங்கிலாந்தைத் தாக்கிய பனிப்புயல் காரணமாக சுமார் 57,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த புயல் நிலைமை காரணமாக பணிகள் மந்தமாகிவிட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன

இதேவேளை, பனிப் புயல் காரணமாக இங்கிலாந்தில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக அதிகாரிகள் 50க்கும் மேற்பட்ட விமானங்களை இரத்து செய்து, விமான ஓடுபாதைகளை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.