இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மோசடி செய்ததாக கனடா கால்கரியில் உள்ள உணவகத்தின் மூன்று தமிழ் உரிமையாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
44000$ திருப்பி தர உத்தரவு.
மணிகண்டன் காசிநாதன் சந்திரமோகன் மர்ஜாக் மற்றும் மேரி ரோச் ஆகியோர் கனடாவில் கால்கேரி என்ற இடத்தில் மெரினா தோசை தந்தூரி கிரில் என்ற உணவகம் நடத்தி அதில் மூவரும் பங்காளிகளாக இருக்கின்றனர்.
இவர்கள் தமது உணவகத்திற்கு வேலைக்கு என்று இந்தியாவில் இருந்து மூன்று தமிழர்களை 2017-2020 பின்னர் வீசா முடிந்த பின்னரும் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பாமல் சட்டவிரோதமாக தங்க வைத்து கனடாவின் நிரந்தர பதிவிட அனுமதி வாங்கித் தரலாம் என்று கூறி வேலை வாங்கி இருக்கின்றார்கள்.
விசாவை புதுப்பிக்க சட்டப்படி அரசாங்கத்திற்கு தலா ஆயிரம் டாலர்கள் மட்டுமே கட்ட வேண்டும்
சட்டக் கட்டணம் 1000 டாலர்கள் மட்டுமே என்றாலும், முதலாளியால் தலா 24000 டாலர்கள் வரை செலுத்த வேண்டும் என்று வேலைக்கு வந்தவர்களிடம் கூறப்பட்டது.
பணத்தை செலுத்தாவிட்டால் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று தொழிலாளர்கள் மிரட்டப்பட்டதாக நீதிமன்றம் நிரூபித்தது.
மூவரும் இந்தப் பணத்தை ஊதியத்தில் கழிப்பதற்காக வாரத்தில் ஆறு நாட்கள் தினமும் 14 மணி நேரம் ஓய்வின்றி கடுமையாக சமையல் வேலையில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் முழுத் தொகையையும்24,000$ செலுத்தினார், மற்றொருவர் $12,000 செலுத்தினார், மூன்றாவது $8,000 செலுத்தினார்.
பணம் செலுத்தாவிட்டால், முதலாளிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று ஊழியர்களை மிரட்டியதற்கான ஆதாரங்களை பாதுகாப்பு வழக்கறிஞர் பிராண்டி ஓ’ஃபெரல் சமர்ப்பித்தார்.
அதாவது ஊதியமின்றி மிரட்டி வேலை வாங்கப்பட்டது என்பது இதன் அர்த்தம்
மேலும் அவர்களுக்கு சுகாதாரமற்ற மிக மோசமான இடத்தில் தங்குமிட வசதி ஏற்பாடு செய்து கொடுத்து அதற்கும் பெருந்தொகையான பணத்தை சம்பளத்திலிருந்து பிடித்து வந்ததாக கூறப்படுகிறது.
சமையல் கலைஞர்களான தாங்கள் பல நாடுகளில் வேலை செய்திருக்கிறோம் ஆனால் இங்கே மட்டும் தான் இப்படி அடிமையாக வந்து சிக்கிக் கொண்டோம் என்று இவர்கள் நீதிபதியிடம் தெரிவித்திருந்தார்கள்.
இவர்களுக்கு கனடாவுக்கு தொழிலாளர்களாக வருவதற்கான விசாவை கனடா அரசாங்கம் வழங்கியிருந்த போதும் இந்த உணவகத்தின் முதலாளிமார் ஒரு வெளிநாட்டு முகவருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமோ அந்தத் தொகை அதாவது ஒருவர் 24000 டாலர் வீதம் தரவேண்டும் என்று நிர்பந்தித்து இந்த கடுமையான வேலையை வழங்கினார்கள்.
உரிமையாளர்கள் நம்பிக்கை மற்றும் அதிகாரப் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக நீதிபதி தீர்ப்பளித்தார், வார இறுதி நாட்களில் 90 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும், 18 மாதங்கள் நன்னடத்தை விதிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுடன் எந்த தொடர்பும் கொள்ளாமல் இருக்கவும், தொழிலாளர்களுக்கு 44000 டாலர்களை திருப்பிச் செலுத்தவும் உத்தரவிட்டார்.
மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இந்த வழக்கு, எந்தவொரு முதலாளியும் உங்களிடம் குடியேற்றக் கட்டணங்களை வசூலிக்கவோ அல்லது உங்கள் அந்தஸ்தை அச்சுறுத்தவோ அனுமதிக்கப்படாது என்பதற்கான தெளிவான எச்சரிக்கையாகும். என நீதிபதி கூறினார்.
கனடாவில் ஒரு முதலாளியால் நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் சட்டவிரோத கட்டணங்களைச் செலுத்தும்படி எப்போதாவது கேட்கப்பட்டிருக்கிறீர்களா? அப்படி உங்களைக் கேட்கப்பட்டிருந்தால் உடனடியாக அரசாங்கத்தை நீங்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
