கிளிநொச்சி முரசுமோட்டையில் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சம்பவ இடத்திலையே நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கிளிநொச்சி – முல்லைத்தீவு பிரதான வீதியில், முரசுமோட்டை பகுதியில், விசுவமடுவிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற கார் வவுனியாவிலிருந்து விசுவமடு நோக்கிச் சென்ற பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காரில் பயணித்த 5 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தோர் கிளிநொச்சி விசுவமடு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
விசுவமடு பகுதியைச் சேர்ந்த பொன்னையா பூபாலன் (46 வயது) , சந்திரகுமார் சவேந்திரன் (வயது 34), புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் குணதர்ஷன்(வயது 36) , அதே பகுதியைச் சேர்ந்த யுவானி பிரசாத் (வயது 34) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் மூவர் விசுவமடு மகா வித்தியாலயத்தில் ஒன்றாக கல்வி கற்று கிளிநொச்சி ரிலேகோ பாமில் ஒன்றாக தொழில் புரிந்த உற்ற நண்பர்கள் என தெரிவிக்கப்படுகிறது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி
- இன்றைய ராசி பலன்கள் (10.02.2026)
- பிறந்த நாள் வாழ்த்து. சுமிதா ஐெயக்குமாரன். (10.02.2026,சிறுப்பிட்டி)
- திருமணநாள் வாழ்த்து. துரையப்பா சுசீலா தம்பதிகள்.(10.02.2026,கனடா)
- யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம் !
