• Di.. März 17th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவின் புலமைப்பரிசில்! வெளிநாட்டு பெண்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Feb. 5, 2026

STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகளில் பிரித்தானியாவில் உயர் கல்வி பயில விரும்பும் வெளிநாட்டு பெண்களுக்காக, முழுமையான நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பிரிட்டிஷ் கவுன்சில் வரவேற்றுள்ளது.

இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம், பெண்கள் பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறும் வாய்ப்பை பெறுவார்கள்.

இதன்படி, தேர்வு செய்யப்படும் மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் முழுவதும், அங்கு தங்குவதற்கான செலவுகள், பயணச் செலவுகள் உள்ளிட்ட அனைத்து முக்கியச் செலவுகளும் நிதியுதவியாக வழங்கப்படும்.

அத்தோடு, கல்விக் காலத்தின்போது தேவையான வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் தொழில்முனைவு வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் ஏற்பாடு செய்யப்படும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.