• Di.. März 17th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடா செல்லும் சர்வதேச மாணவர்களுக்கான விதிகளில் மாற்றம்

Feb. 8, 2026

கனடா அரசாங்கம், சர்வதேச மாணவர்களுக்கான கல்வி அனுமதி (Study Permit) விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர் அனுமதி எண்ணிக்கையைக் குறைக்கும் அதேவேளை, விண்ணப்ப நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (IRCC) புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் அல்லது கல்வி நிறுவனங்களுடன் இணைந்த கூட்டுப் பாடநெறிகளில் சேரும் மாணவர்கள், இனி ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தனித்தனியாக அத்தாட்சி கடிதம்  பெற வேண்டியதில்லை. ஒரே ஒரு மாகாண அத்தாட்சி கடிதம் போதுமானதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொது நிறுவனங்களில் முதுகலை (Master’s) மற்றும் முனைவர் (Doctoral) படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு அத்தாட்சி கடிதம் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.