• Mi.. Apr. 15th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

எரிபொருள் நெருக்கடி தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள தகவல்

März 8, 2026

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரகால திட்டங்களை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தயாரித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கொள்வனவு

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய இந்தியாவிடம் இருந்து அதிகப்படியான எரிபொருளைக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துச் செலவு குறைவு என்பதால் இந்திய நிறுவனங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சிங்கப்பூர் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் திறந்தே உள்ளது.

இதேவேளை, வளைகுடா பிராந்தியத்தில் போர் நீடித்தால், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.