• Mi.. Apr. 15th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மே மாதம் வரை வெப்பமான காலநிலை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

März 8, 2026

நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரும் வெப்பமான காலநிலையானது, எதிர்வரும் மே மாதம் வரையில் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சபரகமுவ, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் வெப்பமான காலநிலை நிலவும்.

வவுனியா, மன்னார், ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மகக்ள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உடல் வெப்பத்தைத் தணிப்பதற்கு தேவையான அளவு நீர் அருந்துமாறும், தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.