ஆபிரிக்க நாடான கானாவில் 256 பயணிகளுடன் இங்கிலாந்துக்குச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று பிரான்ஸில் தரைறக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கானாவில் உள்ள கோட்டோகா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 10.25 மணிக்கு BA78 விமானம் புறப்பட்டது, எனினும் பிரான்சின் லியோனில் திட்டமிடப்படாத தரையிறக்கத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
38,000 அடி உயரத்தில் பயணித்தபோது, விமானக் குழுவினர் அவசரநிலைக்கான சர்வதேச சமிக்ஞை அனுப்பினர். விமான பயணி ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் விமானம் உடனடியாக அருகிலுள்ள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
ஏர்பஸ் A350-1000 உள்ளூர் நேரப்படி காலை 5.26 மணிக்கு லியோன்-செயிண்ட் எக்ஸ்புபெரி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது, இதனால் பாதிக்கப்பட்ட பயணி அவசர மருத்துவ சிகிச்சை பெற முடிந்தது.
ஹீத்ரோவுக்குப் பயணத்தைத் தொடர்வதற்கு முன்பு, எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் இரண்டு மணி நேரம் ஓடுபாதையில் இருந்த பின்னர் லண்டனுக்கு புறப்படு சென்றதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
அதிர்ஷ்டவசமாக, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மேலும் சிக்கல்கள் இல்லாமல் நிலைமையைக் கையாள முடிந்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
