ஐரோப்பிய நாடான சுவிற்சர்லாந்து பிரிபொங் மாகாணம் கெர்சர் நகரில் நேற்று மாலை பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 11 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், கெர்சர் நகர சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து வெளியேற முயன்றனர். 5 பயணிகள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். ஆனாலும், இந்த தீ விபத்தில் பேருந்தில் இருந்த 6 பயணிகள் உடல்கருகி உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பேருந்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், காயமடைந்த 5பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தனர். பேருந்தில் தீ பற்றியது எப்படி? இதில் சதிச்செயல் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரானிய ராணுவத்தின் புதிய எச்சரிக்கை! முடங்கப்போகும் செங்கடல் கப்பல் போக்குவரத்து
- இலங்கையின் பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை
- யாழில் விபத்து! நல்லுார் சிவன் கோவில் பூசகர் படுகாயம்!!
- சிறுப்பிட்டி வடக்கு ஸ்ரீ ஞான வைரவர் கும்பாபிஷேகம்(20.04.2026 ஆரம்பம்:)
- ஈரான் எரிபொருள் மீதான தடைநீக்கம் அமெரிக்கா விடுத்த அறிவிப்பு
