• Do.. Apr. 16th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துருக்கியில் இடம்பெற்ற விபத்தில் சுவிஸ்லாந்தில் வாழும் தாயும் மகனும் மரணம்!

März 23, 2026

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற விபத்தில் டாக்ஸி விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர், தாயகத்தில் நவாலியைச் சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60) மற்றும் அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

தாயாரின் 60வது பிறந்தநாளை துருக்கியில் கொண்டாடிய பின்னர், சுவிற்சர்லாந்திற்கு திரும்ப வானூர்தி நிலையத்துக்கு பயணம் செய்துகொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த துயரச் செய்தி உறவினர்கள் மற்றும் சமூகத்தினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.