• Do.. Apr. 16th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெளிநாடொன்றில் பயணிகளுடன் விபத்தில் சிக்கிய ஏர் கனடா விமானம்!

März 23, 2026

நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையத்திற்கு வந்த ஏர் கனடா விமானம் ஒன்று தீயணைப்பு வாகனம் மீது மோதியதில், நான்கு தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்பகுதியில் மோசமான வானிலை நிலவிய நிலையில், ​​மோன்ரியல் நகரத்திலிருந்து வந்த குறித்த விமானம் ஒரு நுழைவாயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் பின்னர் விமானத்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்து சாய்ந்த நிலையில காணப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து, விபத்துக்குப் பிறகு அவசர சேவை அணிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது, விமானத்தில் சுமார் 100 பயணிகள் இருந்ததாகவும், அவர்களின் உடல்நிலை தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன்போது, நியூயார்க் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் குழுவை அந்த விமானம் ஏற்றிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடொன்றில் பயணிகளுடன் விபத்தில் சிக்கிய ஏர் கனடா விமானம்! | Air Canada Flight Collided New York

Image Credit: Ratopati

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.