• Do.. Apr. 16th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

லண்டனில் தமிழ் குடும்பம் வீட்டில் நடந்த திருட்டு

März 25, 2026

லண்டனில் பட்டப்பகலில் தமிழ் குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

புஷி பகுதியில் உள்ள சில்ரன் அவென்யூவில் (Silton Avenue) குடியிருப்பு பகுதியில் கடந்த 18 ஆம் தேதி மாலை 4:30 மணி முதல் 4:50 மணிக்கும் இடைப்பட்ட குறுகிய காலப்பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

வீட்டின் பின்புற கண்ணாடி கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வீடு முழுவதும் தேடுதல் நடத்திப் பெறுமதியான நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் தாலிக்கொடி உட்படப் பல முக்கிய தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஹேட்ஸ்மியர் (Hertsmere) குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரி சார்லோட் ஹார்ட்லி (Charlotte Hartley) இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறதாக  கூறப்படுகின்றது.

சம்பவம் நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் ஒரு நபர் நடந்து சென்றதை அவதானித்துள்ளனர். சந்தேக நபர் வீட்டை விட்டு வெளியேறுவதை அவர் பார்த்திருக்கலாம் என நம்பப்படுவதால், அந்த நபர் அல்லது தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.