• Do.. Apr. 16th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸ்லாந்தில் தமிழர் ஒருவரின் நகைக்கடையில் கொள்ளை

März 28, 2026

சுவிஸ் லுட்சேர்ன் தமிழர் நகைக்கடை துப்பாக்கி சூடு நடத்தி திருட்டு சம்பவம் ஒன்று கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.

இதன்போது தமிழ் நகைக்கடை வர்த்தகர் வயிற்றுப் பகுதிகளில்
காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்

சந்தேகம் நபர்கள் கைது

பாதிக்கப்பட்ட கடை சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக “பிளிக்” செய்தி வெளியிட்டுள்ளது. துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், இரண்டு பேர் ஒரு காரில் ஏறுவதைப் பார்த்ததாகவும் அப்பகுதிவாசி ஒருவர் அந்த செய்தி இணையதளத்திடம் கூறினார். அவர்களில் ஒருவருக்கு வயிற்றில் இரத்தக்கசிவு இருந்தது.

சம்பவ இடத்தில் துப்பாக்கிக் குண்டு துளைகள் தெரிவதாகவும் பிளிக் செய்தி வெளியிட்டுள்ளது. நகைக்கடைக்காரரின் சகோதரி பிளிக்கிடம், “என் சகோதரர் வயிற்றில் சுடப்பட்டார், தற்போது மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது,” என்று கூறினார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.