• Do.. Apr. 16th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்-கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Apr. 9, 2026

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் போக்குவரத்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

தொடருந்து திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்குக்கான தொடருந்து சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

மஹவ முதல் ஓமந்தை வரையிலான தொடருந்து பாதையில் ஐந்து தொடருந்து பாலங்களை மாற்றியமைக்கவும் யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக செவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு தொடருந்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அந்த வகையில். காலை 5:15 மணியளவில் கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி தொடருந்து புறப்படும் என்றும் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1:05 மணிக்கு கல்கிசை நோக்கி புறப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது

இதற்கான ஆசன முன்பதிவுகள் கடந்த 4ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் பயணிகள் ஆர்வத்துடன் தமக்கான பதிவுகளை மேற்கொள்வதை காணமுடிகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.