வுனியா – சொக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
செக்கடிப்புளவில் வசித்து வந்த 56 வயதுடைய பவளரத்தினம் செல்வமலர் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் மீது அவரது சகோதர முறையானவர் மதுபோதையில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குற்றம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- ஈரானிய ராணுவத்தின் புதிய எச்சரிக்கை! முடங்கப்போகும் செங்கடல் கப்பல் போக்குவரத்து
- இலங்கையின் பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை
- யாழில் விபத்து! நல்லுார் சிவன் கோவில் பூசகர் படுகாயம்!!
- சிறுப்பிட்டி வடக்கு ஸ்ரீ ஞான வைரவர் கும்பாபிஷேகம்(20.04.2026 ஆரம்பம்:)
- ஈரான் எரிபொருள் மீதான தடைநீக்கம் அமெரிக்கா விடுத்த அறிவிப்பு
