சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேரப் பத்திரிகையில் முதன்முறையாக உள்ளடக்கப்பட்டுள்ள ‚அவசர கடமைகளுக்காக புறப்படுவதற்கான‘ சுபநேரம் நாளை (17) அதிகாலை இடம்பிடித்துள்ளது.
இதன்படி, நாளை அதிகாலை 5.38 மணிக்கு பொன் நிற ஆடை அணிந்து, தயிர் கலந்த பாற்சோறு மற்றும் உளுந்து கலந்த தின்பண்டங்களை உட்கொண்டு, வடக்கு திசை நோக்கி அவசர கடமைகளுக்காகப் புறப்படுவது சிறந்தது என சித்திரை புத்தாண்டு சுபநேரப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல, ஏப்ரல் 20 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 6.27 மணிக்கு வெள்ளை நிற ஆடை அணிந்து, பால் கலந்த சோறு மற்றும் தின்பண்டங்களை உட்கொண்டு வடக்கு திசை நோக்கிப் புறப்படுதல் சிறந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.01 மணிக்கு மஞ்சள் நிற ஆடை அணிந்து கிழக்கு திசை நோக்கி மரம் நடுகையில் ஈடுபடுதல் சிறந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இம்முறை புத்தாண்டு சுபநேரப் பத்திரிகையில் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளில் ஈடுபடுவோரைக் கருத்திற்கொண்டே இந்த விசேட சுபநேரம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் பறிபோன உயிர்கள்
- மே 18 ! முள்ளிவாய்க்கால் நினைவு நாள். (2026)
- எபோலா எச்சரிக்கை: அவசரநிலை பிரகடனம்
- யாழில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்து தங்கியிருந்த முதியவர் ஒருவர் கொலை
- ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் 4 பேர் பலி !
