• Mo.. Mai 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இங்கிலாந்தில் காவல்நிலையம் அருகே கார் குண்டுவெடிப்பு

Apr. 26, 2026

இங்கிலாந்து நாட்டின் தெற்கு அயர்லாந்து மாகாணம் டன்முரி நகரில் உள்ள காவல் நிலையம் அருகே இன்று(26) நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது.

உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினர், பாதுகாப்புப்படையினர் குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 பின்னர் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் என்று தெரியவந்துள்ளது. அதேவேளை, கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.