• Mo.. Mai 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்..

Apr. 29, 2026

வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் தற்காலிக நாடுகடத்தல் பாதுகாப்பை ரத்து செய்யும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சிக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டுப் போர் அல்லது இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் இந்தத் திட்டத்தை 13 நாடுகளுக்கு நீட்டிக்காமல் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் பழமைவாத நீதிபதிகள், இத்தகைய முடிவுகளை ஆய்வு செய்ய கூட்டாட்சி நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.சிரியா மற்றும் ஹெய்ட்டி நாட்டுப் பயனாளிகளின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள், ட்ரம்ப் கொண்டுள்ள இனவெறுப்பு காரணமாகவே இந்தச் செயல்முறை பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டுள்ளனர்

இறுதி முடிவைச் சட்டப்படி ஆய்வு செய்ய முடியாவிட்டாலும் அந்த முடிவை எடுக்க அதிகாரிகள் கையாண்ட முறையை ஆய்வு செய்ய முடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருப்பினும், தற்போதைய சட்டம் இந்த அந்தஸ்தை வழங்குவதற்கும் ரத்து செய்வதற்கும் அரசாங்கத்திற்குப் பரந்த அதிகாரத்தை வழங்கியுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியதுடன் சிரியா போன்ற நாடுகளில் தற்போது தரைமட்ட நிலவரம் மாறியுள்ளதாக நீதிபதி பிரட் கவனா குறிப்பிட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.