• Mo.. Mai 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Mai 6, 2026

யாழ்ப்பாணம், கோப்பாயில் இன்று (5) இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீவிர விஜய் ஆதரவாளரான குடும்பஸ்தர் ஒருவர், தமிழக தேர்தலில் விஜய் வெற்றியீட்டியுள்ளார், அதனால் மது அருந்தி கொண்டாடப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் நெடுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடுதல் நடத்திய போது, தனது தந்தையின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது தற்கொலை மரணம் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத் தேர்தலில் தவெக முன்னிலை பெற்று வரும் நிலையில், இலங்கையிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் அவரது ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த உற்சாகமான சூழலில், ரசிகரின் இந்த விபரீத முடிவு குறித்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், வெற்றியீட்டியுள்ள நிலையில், விஜய்யின் வெற்றியை கொண்டாடப் போவதாக கூறிவிட்டு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், கோப்பாயில் (5) இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீவிர விஜய் ஆதரவாளரான குடும்பஸ்தர் ஒருவர், தமிழக தேர்தலில் விஜய் வெற்றியீட்டியுள்ளார், அதனால் மது அருந்தி கொண்டாடப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் நெடுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடுதல் நடத்திய போது, தனது தந்தையின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது தற்கொலை மரணம் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத் தேர்தலில் தவெக முன்னிலை பெற்று வரும் நிலையில், இலங்கையிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் அவரது ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த உற்சாகமான சூழலில், ரசிகரின் இந்த விபரீத முடிவு குறித்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.