• Do.. Juni 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி ; அதிர்ஷ்டம் காத்திருக்கும் இராசிகள்

Mai 14, 2026

 ஜோதிடத்தில் சுக்கிர பகவான் ஒருவருக்கு சுகபோக வாழ்க்கையை வழங்கக்கூடியவராக இருக்கிறார். சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் தான் அந்த ஜாதகர் நல்ல சொகுசான வாழ்க்கையும், சமுதாயத்தில் பெயர் புகழ் பணத்தோடும் வாழ முடியும்.

அப்படியாக, மே எட்டாம் தேதி சுக்கிர பகவான் மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால் மிகப்பெரிய அளவில் பண மழையைகொடுக்கப் போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:  மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றமானது இவர்களுக்கு நீண்ட நாள் கைகளுக்கு வராத பணம் வந்து சேரும். தொழில் ரீதியாக கூட்டாளியுடன் இருந்து வந்தது மன கசப்புகள் விலகும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் பற்றி யோசிப்பீர்கள். இடம் மாற்றம் பதவி உயர்வு உங்களுக்கு வந்து சேரும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றமானது வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சியை நடத்தி கொடுக்கப்போகிறது. நீண்ட நாட்கள் நீங்கள் மனதில் நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். தொழில் ரீதியாக எதிர்பாராத லாபத்தை பெறுவீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் நீங்கள் அடுத்த கட்ட வியாபார நகர்வை நோக்கி செல்வீர்கள்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் இந்த நட்சத்திர இடம் மாற்றம் இவர்களுக்கு தொழில் ரீதியாக நிறைய தேடுதலை கொடுக்கப்போகிறது. அதாவது ஒருவேலை மட்டும் செய்து கொண்டிருந்தவர்கள் இரு வேலை என்று அவர்கள் பணத்தை உயர்த்துவதற்கான வேலையில் ஈடுபடுவார்கள். அது மட்டுமல்லாமல் பல வழிகள் மூலமாக இவர்கள் பணத்தை சம்பாதிக்க கூடிய காலகட்டமாக இருக்கிறது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.