• Do.. Juni 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வரலாற்று சிறப்பு மிக்க திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்

Mai 21, 2026

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்றைய தினம் (21) காலை உற்சவ மூர்த்திகளுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கொடி கம்பத்திற்கு அருகாமையில் எழுந்தருளியதை தொடர்ந்து கொடி கம்பத்திற்கு அபிஷேகம் இடம் பெற்றது.

அதனைத்தொடர்ந்து கொடியேற்ற பெருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு தியாகராஜா கருணாநந்த குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம் பெற்றது.

இதன் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வரலாற்று சிறப்பு மிக்க திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம் | Mannar Thiruketeeswara Temple Annual Festival

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.