வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்
A-9 வீதியில் கனகராயன்குளம் – பெரியகுளம் பகுதிக்கு அருகில் நேற்றிரவு (02) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பின்னால் வந்த ஹயஸ் வாகனம் கார் மீது மோதியதில் குறித்த கார் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் இருவரும் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
