• Mo.. Juli 20th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சென்னையில் தீ விபத்து; 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்

Juni 4, 2026

 சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதன் அருகே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பகுதிக்கும் அடுத்தடுத்து பரவியது.

இதில், 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. அவை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் என்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன என்றும் கூறப்படுகிறது. கரும்புகை வான் வரை பரவியுள்ளது.

இதனால், மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி வகை வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது. சென்னை பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரியில் கரும்புகையால் மக்கள் அவதியடைந்து உள்ளனர். தீயை விரைந்து அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் பெரும் தீ விபத்து; 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம் | Fire Chennai Pallikaranai Over 100 Cars Destroyed
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.