• Mo.. Juli 20th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்கு தடை

Juni 8, 2026

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், 16 வயதிற்கு குறைவான குழந்தைகள், தீங்கு விளைவிக்கக்கூடிய சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் திட்டத்தை அறிவிக்கவுள்ளார்.

டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட தகவலின்படி, சில பாதுகாப்பான சமூக ஊடக செயலிகள் அனுமதிக்கப்படும், ஆனால் மனநலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஆபத்தான தளங்கள் தடை செய்யப்படும்.

இந்த முடிவு, சமூக ஊடகங்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுடன் நடந்த உரையாடல்களும், அவுஸ்திரேலியாவில் 2025 டிசம்பரில் அமுல்படுத்தப்பட்ட தடை சட்டத்தின் அனுபவங்களும் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

டவுனிங் தெருவிலிருந்து வந்த தகவலின்படி, „இளைஞர்களை பாதுகாக்க, தொழிலம்னுட்ப நிறுவனங்களையும் எதிர்கொள்ள பிரதமர் தயங்கவில்லை“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், முழுமையான தடை உடனடியாக அமுல்படுத்தப்படாது. முதலில் குழந்தைகள் ஓன்லைனின் பாலியல் படங்களை உருவாக்குவதை தடுக்கும் நடவடிக்கைகள் அறிவிக்கப்படலாம்.

பிரித்தானிய அரசு, சமூக ஊடகங்கள் குழந்தைகளின் மனநலத்திற்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து முன்பு ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையில், ஊரடங்கு உத்தரவுகள், நேர வரம்புகள் மற்றும் அடிமைத்தன வடிவமைப்பு அம்சங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் யோசனைகள்முன்வைக்கப்பட்டன.

பிரான்ஸ், டென்மார்க், போலந்து ஆகிய நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை பரிசீலித்து வருகின்றன. கிரீஸ், 2027 ஜனவரி முதல் 15 வயதிற்கு குறைவானவர்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்யும் சட்டத்தை அறிவித்துள்ளது.

இதேவெளை, சில இளைஞர்கள், முழுமையான தடை தேவையில்லை என எதிரிப்பு தெரிவித்துள்ளனர். நிபுணர்களும், முழுமையான தடை எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பது சந்தேகமே என கூறுகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.