• Mo.. Juli 20th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான நிரந்தர குடியுரிமை திட்டம் ரத்து

Juni 16, 2026

கனடாவின் மேனிடோபா மாகாண அரசு, சர்வதேச மாணவர்களுக்கான நிரந்தர குடியுரிமை பெறும் திட்டத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

கனடாவில் படிப்பை முடித்த உடனே ஏதேனும் ஒரு துறையில் ஓராண்டு வேலைக்கான ஒப்பந்த கடிதம் பெற்றால், உடனடியாக பி.ஆர்., எனப்படும் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த குடியுரிமை பெறுவதற்கான சி.இ.பி., எனும் ‚கேரியர் எம்ப்ளாயிமென்ட் பாத்வே‘ திட்டம் கனடாவில் உள்ள மாகாண அரசுகள் செயல்படுத்தி வந்தன. 

 இந்நிலையில், இத்திட்டத்தை மேனிடோபா மாகாண அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.புதிய விதிகளின்படி இனி பட்டப்படிப்பு முடித்ததும், நேரடியாக நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாது.

ஒரு நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் முழு நேரப் பணியாளராக பணியாற்றி இருக்க வேண்டும். தற்காலிக ஒப்பந்தங்கள் ஏற்கப்படாது. நீண்ட கால அடிப்படையில் முழு நேர பணிக்கான ஒப்பந்த கடிதம் பெற்றிருக்க வேண்டும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.