• Mo.. Juli 20th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

லண்டனில் தரையிறங்கிய விமான சக்கரத்தில் தொங்கிய சடலம்!

Juni 21, 2026

பிரித்தானியாவின் லண்டனிலுள்ள விமான நிலையம் ஒன்றில் தரையிறங்கிய விமானத்தின் சக்கரத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரையிறங்கிய சவுதி அரேபிய விமானம் ஒன்றிலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

மொராக்கோவின் Tangier நகரிலிருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்த Air Arabia Maroc நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்திலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கியதும் சக்கரத்தின் பகுதியில் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மீட்புக் குழுவினர் உடனடியாக அழைக்கப்பட்டனர்.

லண்டன் கேட்விக் அவசரப் பிரிவினரும் மற்றும் சசெக்ஸ் காவல்துறையினரும் சடலத்தை மீட்டுள்ளனர்.

இது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரித்தானியாவுக்குச் சட்டவிரோதமாக நுழையும் நோக்கில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.