APPLE நிறுவனத்தின் தயாரிப்பான iPhone 18 Pro வெளிவரவுள்ள நிலையில் குறித்த கையடக்க தொலைபேசி தொடர்பான தகவல் கசிந்துள்ளது.
APPLE நிறுவனத்தின் தயாரிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் கையடக்க தொலைபேசியான, iPhone 18 Pro இவ்வாறு கசிந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி இந்தத் தொலைபேசியின் தோற்றம் தொடர்பான விடயங்கள் தற்போது இணையத்தளங்களில் கசிந்துள்ளன.
இணையத்தளங்களில் வெளியான தகவல்களின்படி, iPhone 18 Pro மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் Drop Test (கீழே விழும் நிலைத்தன்மை சோதனை) தொடர்பான காணொளி மற்றும் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன
இந்த தகவல் கசிவின் மூலம், புதிய iPhone Model இன் வடிவமைப்பு, கேமரா அமைப்பு மற்றும் வெளிப்புற கட்டமைப்பு குறித்து சில முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளதாக தொழில்நுட்ப தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த தகவல்கள் குறித்து அப்பிள் நிறுவனம் இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
