யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (05) இடம்பெற்ற இந்த விபத்தில் கோவில் வீதி – நல்லூரைச் சேர்ந்த 72 வயதான ஆறுமுகம் ஏகானந்தசிவம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றையதினம் கல்வியங்காட்டில் சாப்பாடு வாங்கிக்கொண்டு பருத்தித்துறை வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தார்.
இந்தநிலையில், வலதுபக்க வீதியால் செல்வதற்காக மத்தியகோடு நோக்கி பயணித்த போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது குறித்த முதியவர் மயக்கமுற்ற நிலையில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
